- Parents should be concerned about their child's well-being and cooperate in all the activities taken by the school to develop virtues such as discipline, control, and punctuality.
- Purchase the textbooks, notebooks, and other materials required by their children on time.
- Prepare at least two uniforms for their children and send them to school in uniform.
- Ask about the homework assigned to the children daily and help them do it.
- If you want to bring food to your children, you should give it to the school watchman.
- You can ask for the information you need at the school office. But avoid going to classes when the school is in session.
- Attendance of students at all functions held in the school is mandatory.
The above school rules are followed for the welfare of the children. Parents are requested to understand this and cooperate with the administration.
- பெற்றோர்கள் குழந்தையின் நலத்தில் அக்கறை கொண்டு ஒழுக்கம், கட்டுப்பாடு, நேரம் தவறாமை போன்ற நற்பண்புகளை வளர்க்க பள்ளி எடுக்கும் எல்லா நடவடிக்கைகளிலும் ஒத்துழைக்கவும்.
- தங்கள் குழந்தைகளுக்குத் தேவைப்படும் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், மற்றும் இதர பொருட்களை உரிய நேரத்தில் வாங்கிக்கொடுக்கவும்.
- தங்கள் குழந்தைகளுக்கு குறைந்தது இரு சீருடைகளாவது தயார் செய்து வைத்துக் கொண்டு சீருடையில் பள்ளிக்கு அனுப்பவும்.
- தினசரி குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வீட்டுப்பாட வேலைகளைக் கேட்டறிந்து அவற்றை செய்ய உதவ வேண்டும்.
- தங்கள் குழந்தைகளுக்கு உணவு கொண்டு வந்து கொடுக்க விரும்பினால் பள்ளி காவலரிடம் கொடுத்து செல்ல வேண்டும்.
- தங்களுக்கு வேண்டிய தகவல்களை பள்ளி அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் பள்ளி நடைபெறும்பொழுது வகுப்புகளுக்குச் செல்வதை தவிர்க்கவும்.
- பள்ளியில் நடைபெறும் அனைத்து விழா நிகழ்ச்சிகளுக்கும் மாணவர்களின் வருகை கட்டாயமாகும்.
மேற்கூறிய பள்ளியினுடைய விதிமுறைகள் குழந்தைகளின் நலனுக்காக கடைபிடிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் இதனை உணர்ந்து நிர்வாகத்தோடு ஒத்துழைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.